இந்திய முக்கிய செய்திகள்

* இந்தியாவில் 1 லட்சத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், வெள்ளிக்கிழமை 94,052 ஆக குறைந்தது.

* கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு ஐ.நா. வாயிலாக சுமார் 60 லட்சம் கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

* கடந்த 3 ஆண்டுகளாக தேக்கத்தில் இருந்த வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டில் முன்னேற்றம் கண்டிருப்பதாக மத்திய வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

* நாளை நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அத்தியாவசிய மருந்து ரொருள்கள் மீதான வரியை நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

* உயரிய பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களின் பெயர் விவரங்களை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

* ஏ.டி.எம்.களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையை தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாகிறது.

* தமிழகத்தின் 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

* தமிழகதத்தில் 2ஆவது தவணையாக ரூ.2000, 14 வகையான மளிகை பொருள்களை வழங்குவதற்கான டோக்கன்கள் இன்றுமுதல் வீடுவீடாக விநியோகிக்கப்படுகின்றன.

* தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதிப்பெண் இன்றி சான்றிதழ் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

* சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

* கரோனா வைரசிலிருந்து நம்மை காக்கும் வீரியமிக்க மலிவுவிலை முகக்கவசங்களை இந்திய நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. மறுஉபயோகத்துக்கு பயன்படாத என்95 முகக்கவசங்களுக்கு பதிலாக இது உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய தொழில்துறை தெரிவித்துள்ளது.

* பொதுத்துறை நிறுவனங்கள் வசம் உள்ள பெரிய அளவிலான எண்ணெய், இயற்கை எரிவாயு வயல்கள் விரைவில் ஏலம் விடப்படும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

* மும்பையில் கடந்த புதன்கிழமை இரவு 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் 8 குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

* சீனாவில் பயிலும் இந்திய மாணவர்கள், பணியாளர்களுக்கு விசா வழங்கி, அவர்களை மீண்டும் சீனாவுக்குள் அனுமதிக்க அந்நாடு ஆவண செய்ய வேண்டுமென மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் ஜூலை 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

3 × 3 =