இந்திய முக்கிய செய்திகள்…

நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40 கோடி பேரும் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பாகுபலிகளாகி இருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

ஆல்பா வைரசை விட டெல்டா வைரஸ் 60 சதவீதம் அதிகம் பரவும் தன்மை கொண்டது என்றார் கோவிட் தடுப்பு நிபுணர்கள் குழு தலைவர் என்.கே. அரோரா.

மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது.

பிரதமர் மோடி வானொலியில் பேசும் மன்கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.30.80 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 7 கோடியே 38 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

ராஜ்ய சபா பாஜக துணைத்தலைவராக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Add your comment

Your email address will not be published.

4 × 4 =