இந்திய முக்கிய செய்திகள்…

ரபரப்பான அரசியல் சூழலில், இன்று பாராளுமன்றம் டெல்லியில் கூடியது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், 17 மசோதாக்களை தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது, அடுத்த மாதம் நடைபெறும் மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி படத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அவர் அழைப்பார் என்றும், எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

திருப்பதி கோயிலில் கடந்த சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியே 24 லட்சம் வசூலானது.

மும்பையில் கனமழைக்கு 25 பேர் பலியாகினர்.

பழங்கால வாகனங்களை பதிவு செய்ய கட்டணமாக ரூ.20,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

seventeen − 6 =