இந்திய முக்கிய செய்திகள்…

* வளரும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் பொருளாதார வழித்தட சாலை திட்டத்துக்கு எதிராக ஜி7 நாடுகள் முன்மொழிந்த திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

* இந்தியாவில் உள்ள 2.6 கோடி ஹெக்டேர் சீர்கேடு அடைந்த நிலங்களை 2030ஆம் ஆண்டுக்குள் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

* கென்யாவுக்கு 3 நாள் பயணமாக சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

* கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் தேவைகளை நிறைவுசெய்ய பிரதமரின் நல நிதியிலிருந்து நாடு முழுவதும் 850 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படுவதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தெரிவித்தது.

* இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் தொற்று, தற்போது டெல்டா பிள்ஸ் ஆக உருமாறியிருப்பதாகவும், இதன் மூலம் ஆபத்து இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

* மத்திய அரசில் பணியாற்றும் துணைச் செயலர்கள், அதற்குமேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் அனைத்து வேலை நாள்களிலும் அலுவலகத்துக்கு கட்டாயம் வர வேண்டுமென மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

* தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதில் வணிகவியல் பிரிவை தேர்ந்தெடுப்பதில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

* தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

* தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக நாகை முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டார். இவர் 2 ஆண்டுகாலம் இந்த பதவியில் நீடிப்பார் என்று தெரியவருகிறது.

* புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட பாஜக எம்எல்ஏ ஆர். செல்வம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் நாளை நடைபெறும் தேர்தலில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

* புதிதாக அமைந்த புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான அரசுடன் இணக்கமாக செயல்படுவேன் என புதுவை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜ் அறிக்கை வெளியிட்டார்.

* புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரைக்கால், மாஹி, ஏனாம் பிராந்திய ஊழியர்களுக்கும் பொருந்தும்.

Add your comment

Your email address will not be published.

sixteen − eleven =