ரெட் லிஸ்டில் இணைந்தது இந்தியா பயண தடை தொடங்கியது

உலகிலேயே அதிகளவில் இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல் பதிவாகி வருவதால், இந்திய பயணிகளை பிரிட்டனுக்குள் அனுமதிக்க மறுக்கும் வகையிலான பயண தடை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதேவேளையில், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு நேரடி விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பிரிட்டன், அயர்லாந்து நாட்டினரும், இந்நாடுகளில் வசிப்பதற்கான குடியுரிமை பெற்றவர்களுக்கும், பயண தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனாலும், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஹோட்டலில் தங்கள் சொந்த செலவில் 10 நாள்கள் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் உருமாறிய கரோனா தொற்று பிரிட்டனில் கூடுதலாக 55 பேருக்கு கண்டறியப்பட்டிருப்பதாக இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது. இந்திய தலைநகர் டெல்லியில் 6 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிற மருத்துவமனைகளிலும் வெகு சில மணிநேரத்துக்கான ஆக்ஸிஜன் மட்டுமே இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

two × 4 =