இந்திய செய்திகள் சில வரிகளில்…

பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த ரூ.6.29 லட்சம் கோடி நிவாரண தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்திய பொருளாதாரத்தின் மைல்கல் ஜிஎஸ்டி என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

ந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு ஜூலை 31ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கு அவசரகால உதவியை அளிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டுவிட்டரில் காணக் கிடைக்கும் ஆபாச படங்களை இன்னும் ஒரு வாரத்தில் நீக்க வேண்டுமென அந்நிறுவனத்துக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

ந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மீது விதிப்பது வரியல்ல, வரிக் கொள்ளை என்றார் அவர்.

டெல்டா, ஆல்”ஃ”பா தொற்றுக்கு எதிராக கோவேக்ஷின் நல்ல முறையில் எதிர்வினை புரிவதாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்தது.

ர்வதேச இணைய பாதுகாப்புக் குறியீடு (ஐசிஓ) வரிசைப் பட்டியலில் 10ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியது.

ந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 33 கோடியை கடந்தது. தமிழகத்தில் 4,506 ஆக நேற்று பாதிப்பு பதிவானது.

கோவேக்ஷின் தடுப்பூசி கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தியது பிரேசில்.

ந்திய தயாரிப்பான கோவேக்ஷின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களை ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்க வேண்டும். இல்லையென்றால், அந்நாட்டில் இருந்து இந்தியா வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என இந்தியா எச்சரிக்கை விடுத்ததுள்ளது.

Add your comment

Your email address will not be published.

6 + eleven =