சுதந்திரமான ஆலோசகரை நியமிக்க வேண்டும்

நன்கொடை விவகாரம்

பிரதமர் மீதான நன்கொடை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சுதந்திரமான தரநிலை ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டுமென தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் டவ்னிங் தெருவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சி நன்கொடைதாரர்களிடமிருந்து ஆண்டுக்கு 30 ஆயிரம் பவுண்ட் வரை தாராளமாக நிதி பெற்றதாக கூறப்படுகிறது. அதிலும், அவர் அண்மையில் மேற்கொண்ட சீரமைப்புப் பணிக்காக 2,00,000 பவுண்ட் வரை செலவிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம், இதன் மீது விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், அரசியல் கட்சி சாராத லார்ட் கெய்ட் என்பவரை பிரதமரின் ஆலோசகராக தேர்தல் ஆணையம் புதன்கிழமை நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொழிலாளர் கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், லார்ட் கெய்ட் விசாரணையை தொடங்கும் முன்பாக பிரதமரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது தவறு என்று கூறியதுடன், இதற்கு பதிலாக சுதந்திரமான தரநிலை ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாக தங்களின் நடவடிக்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் நன்கொடை அல்லது கடன்கள் குறித்து அதை பெற்ற 28 நாள்களுக்குள் அமைச்சர்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

nineteen − 7 =