இந்திய செய்திகள்…

உத்தரகண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,தமிழகம், சிக்கிம், ஜம்மு- காஷ்மீர் உள்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ட்ரோன்கள், ஆளில்லா பறக்கும் கருவிகள் ஆகியவற்றுக்குத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மதங்களைக் கடந்து இந்தியர்கள் அனைவரும் ஒன்றுதான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

பங்குச் சந்தைகள் வாயிலாக ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனை செய்தாலும், அதன் மீது டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் விவசாயிகள் போராட்டம் நடத்துவர் என்று சம்யுக்த கிஸான் மோர்ட்சா விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த பிரான்ஸ் உத்தரவிட்ட பிறகு மத்திய அரசு அமைதிகாத்து வருவது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

2020-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமாக நாட்டில் அனைத்துக் குழந்தைகளுக்கும் எழுத்தறிவு வழங்கும் ‘நிபுண்பாரத்’ திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

three + six =