இந்திய செய்திகள்

இந்தியாவுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமித்துள்ளது.

ஒரே துறையின் கீழ் நியாயவிலைக் கடைகள் கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசித்தார்.

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி (45)  பதவியேற்க உள்ளார்

தமிழகத்தின் ஆன்மீகத் தளங்களில் சுற்றுலாவை மேம்படுத்துமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக பாஜக தலைவர் எல். முருகன் சனிக்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடலூர் மாவட்டம்,பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

நீட் பாதிப்பை ஆராய குழு அமைத்தது அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயல் அல்ல
நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கான குழுவை அமைத்து, அரசமைப்புச் சட்ட உரிமைகளை மீறிய செயல் அல்ல என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

வர்த்தகர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டிய விவகாரம் குறித்து நடுவர் மன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

நெடுஞ்சாலை துறையின் பாலப் பணிகளில் ஆற்று மணலுக்குப் பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் ஃபேஸ்புக், கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

காகிதமில்லாத பேரவை என்ற திட்டத்தின் அங்கமாக தமிழக எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் நிதிநிலை அறிக்கையை அந்த கணினி மூலமாகவே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்க மொழிகளைப் பேணிக் காப்பது அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

ஹைதராபாத், புணேயில் தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், மகாராஷ்டிரா மாநிலம், புணேயில் இரு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்களை அமைக்க ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியிலிருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிக அளவில் பரவி வரும் டெல்டா வகை கரோனோ தீநுண்மிக்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி 65.2 சதவிகித செயல்திறனை கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாவிடில் கரோனா மூன்றாம் அலை பாதிப்பு வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் உச்சத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.மேலும் இரண்டாம் அலையின் போது பதிவான தினசரி பாதிப்பில் பாதி அளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் போலி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது தொடர்பாக ,மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் தவறான தகவலை அளிக்கிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

sixteen − fifteen =