கரோனா தொற்றுடன் வாழ பழகுங்கள் பொதுமக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுரை

இங்கிலாந்தில் பிரமாண்ட தடுப்பூசி முகாம்களின் வாயிலாக 84 சதவீத பெரியவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமன்றி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பு வீதமும் பெருமளவு கட்டுக்குள் வந்துவிட்டது. இதனால், வரும் ஜூலை 19ஆம் தேதி இறுதிகட்ட தளர்வுகள் அமல்படுத்தப்படுவது உறுதி என்று அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், அதற்குப் பிறகு இன்ப்ளூயன்சா போன்ற காய்ச்சலை போல், கரோனா தொற்றுடனும் வாழ பொதுமக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

12 − 2 =