in ,

அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை


Watch – YouTube Click

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என திருவண்ணாமலை, சென்னை பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை முதலே இந்த சோதனையானது தீவிரமடைந்து வருகிறது. அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி, அமைச்சரின் உறவினர்களின் வீடுகள் , நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள் என சென்னை, திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது தீவிர படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய அவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் அருணை பொறியியல் கல்லூரியிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் எ.வ.வேலு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது வருமான வரித்துறை வழக்கு பதிந்து, பின்னர் அந்த வழக்கில் இருந்து எ.வ.வேலு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.


Watch – YouTube Click

What do you think?

ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியா எச்சரிக்கை

ஆசிரியர் மகனுக்கு நடந்த சோகம்