in

2024ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ரெய்டு


Watch – YouTube Click

2024ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ரெய்டு

 

2024ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ரெய்டு வரும் என்ற பயத்தில் புதுச்சேரியின் பாஜக அமைச்சர்கள் வெளிநாட்டில் தங்களது பணத்தை கொண்டு சென்றுள்ளனர் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்தியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மக்கள் தலைவருமான ராகுல்காந்தியை இழிவுபடுத்தும் வகையில் பத்துதலை ராவணனாக சித்தரித்து போஸ்டர் வெளியிட்ட பாஜக அரசியலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடந்தது. காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை ஏற்க முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் ரமேஷ் பரம்பத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பேசிய முன்னாள் நாம் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனால் கருத்து வேறுபாடுகளை மறந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். யார் வேட்பாளர் என்பது முக்கியமில்லை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றார்.
செயல்படாத அரசுக்கு தலைவராக இருக்கும் முதலமைச்சர் ரங்கசாமியால் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை. அனைத்து துறைளிலும் ஊழல் அனைத்து துறைகளிலும் கமிஷன் என பட்டியலிட்டார் நாராயணசாமி..

புதுச்சேரிக்கு மாநில அரசு தரமாட்டோம் என மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இதற்குப் பிறகும் முதலமைச்சர் ரங்கசாமி ஏன் ராஜினாமா செய்யவில்லை… பாஜகவை கூட்டணியில் இருந்து ஏன் வெளியேற்ற வில்லை…? என கேள்விகளை எழுப்பிய நாராயணசாமி, காரணம் ரங்கசாமியும் பாஜகவும் கூட்டு கொள்ளை என்றும் 2024ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ரெய்டு வரும் என்ற பயத்தின் காரணமாக புதுச்சேரியில் பாஜக அமைச்சர்கள் வெளிநாட்டில் தங்களது பணத்தை கொண்டு சென்றுள்ளனர். புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக கொள்ளை அடித்து விடுவார்கள். காங்கிரஸ் ஆட்சியால் தான் புதுச்சேரி மக்களுக்கு பாதுகாப்பு. அதற்கு முன்னோடியாக ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற வேண்டும் என்றார்.

அடுத்து பேசிய காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, அடுத்து ஆட்சி மாற்றம் வந்தால் 3 பட்டன் (ED, CBI, IT) நம்மிடம் வந்தால் மாற்றி கொள்வோம் என ஒருவர் அமைச்சர் பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைக்கிறார். இவர்களை மாற்ற வேண்டும் என்றால் ஒரு செய்தால் போது மோடியை மாற்றினால் நாடே மாறிவிடும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

இஸ்ரேலில் குண்டுமழை பொழியும் ஹமாஸ்

உலக கோப்பை போட்டி நியூசிலாந்து முதலிடம்