கனடாவில் பள்ளியில் தோண்ட தோண்ட குழந்தைகளின் எலும்புகள்!

 

கனடாவில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் உண்டு உறைவிட பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வின்போது 215 குழந்தைகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

கனடாவில் கடந்த 1890ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளின் கட்டுப்பாட்டின்கீழ், காம்லூப்ஸ் இந்திய உண்டு உறைவிட பள்ளி தொடங்கப்பட்டது. அந்நாட்களில் மிகப்பெரிய பள்ளியாக கருதப்பட்ட இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றனர். கடந்த 1950ஆம் ஆண்டுகளில் இங்கு இடம் கிடைப்பதே அரிது என்ற வகையில், இப்பள்ளி புகழ்பெற்று விளங்கியது. இதைத்தொடர்ந்து இப்பள்ளியின் நிர்வாகத்தை கனட அரசு கடந்த 1969இல் கையில் எடுத்தது. அதன்பின்னர் இதன் செல்வாக்கு மங்க தொடங்கி, கடந்த 1978ஆம் ஆண்டில் இப்பள்ளி முற்றிலும் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு பயின்ற மாணவர்களின் நிலை குறித்து வெளியுலகுக்கு எந்தத் தகவலும் வரவில்லை.

இந்த சூழலில், அண்மையில் இப்பள்ளியின் தரையில் ஊடுருவி ரேடார் வாயிலாக சோதனை நடத்தப்பட்டதில், மனித எலும்புகள் தட்டுப்பட்டன. தொடர்ந்து, அங்குலம் அங்குலமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இந்த பள்ளியில் 215 மாணவர்களின் எலும்புகள் மீட்கப்பட்டன. அதில் 3 வயது குழந்தைகளின் எலும்புகளும் அடங்கும். இந்நிகழ்வு கனட நாட்டின் வெட்கக்கேடான அத்தியாயத்தின் வலிநிறைந்த நினைவூட்டல் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேதனை தெரிவித்துள்ளார். பிள்ளைகளின் இறப்புக்கான காரணங்கள், இறந்த காலகட்டம் ஆகியவற்றை கண்டறிவதற்காக அருங்காட்சியக நிபுணர்கள், நீதித்துறை அதிகாரிகளுடன் இணைந்து கனட அரசு செயல்பட்டு வருகிறது.

Add your comment

Your email address will not be published.

eleven + eighteen =