வில்ஸ்டரில் தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள்!

வில்ஸ்டர் ஹேடெஸ்பரி பகுதியில் உள்ள தோட்டத்தில் குழி தோண்டியபோது பெண், சிறுவன், குழந்தை உள்பட 5 பேரது எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை 5ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ராபி கேர்னி (32) என்ற கட்டடப் பணியாளர் தலைமையிலான குழுவினர், இந்தத் தோட்டத்தில் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, சில எலும்புக் கூடுகள் தென்பட்டன. முதலில், அவை விலங்குகளின் எச்சங்களாக இருக்கலாம் என்று கருதிய அவர்களுக்கு, மேற்கொண்டு தோண்டியபோது அதிர்ச்சி காத்திருந்தது.
கீழே தோண்ட தோண்ட மனித தலை உள்ளிட்ட எஞ்சிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. உடனடியாக பணியைக் கைவிட்ட அவர்கள், உள்ளூர் போலீஸýக்கு தகவலளித்தனர். தொடர்ந்து, தடயவியல் நிபுணர்களுடன் காவல் துறையினர் அங்கு வந்தனர்.
அந்த எலும்புகள் அனைத்தும் இடைக்காலத்தில், அதாவது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களின் எச்சங்களாக இருக்கலாம் என்றும், அதன் வயதை கண்டறிவதற்கான ரேடியோ கார்பன் சோதனை நடத்தி வருவதாகவும் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இடைக்காலத்தில் பரவிய பிளேக் நோயால் உயிரிழந்தவர்களின் சடலத்தை மொத்தமாக அடக்கம் செய்யப்பட்ட இடமாக இது இருக்கலாம் என்று உள்ளூர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜோ சார்லஸ்வொர்த் தெரிவித்தார்.
இந்த எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்தின் அருகே 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர், செயின்ட் பால் தேவாலயங்கள் அமைந்திருக்கின்றன.

Add your comment

Your email address will not be published.

20 + nineteen =