பொது இடங்களில் கட்டித் தழுவவும், விடுமுறை கொண்டாட்டத்துக்கும் அனுமதி

பிரதமர் அறிவிப்பு

பிரிட்டனில் பொது இடங்களில் கட்டித் தழுவவும் விடுமுறை தின கொண்டாட்டங்களுக்கும், தியேட்டர்களை மீண்டும் திறப்பதற்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி அளித்திருக்கிறார். இதுதவிர பிரிட்டனில் தங்குவதற்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகின்றன. இந்த புதிய தளர்வுகள் அனைத்தும் மே 17 (திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கரோனா தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பதாகவும், ஆசிரியர்களிடையே கரோனா பரவல் மிதமாக காணப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதால், மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் மே 17 முதல் முகக் கவசம் அணிய தேவையில்லை. அதேவேளையில், வாரத்தில் 2 நாள்கள் வீடுகளுக்கே வந்து நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமன்றி பிரிட்டனில் தங்குவதற்கான கட்டுப்பாடுகளும் முற்றிலுமாக தளர்த்தப்படுகின்றன. இதனால், பச்சைப் பட்டியலில் உள்ள போர்ச்சுகல், கிப்ரல்தார், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எந்தவித தடையும் இன்றி பொதுமக்கள் சென்று வரலாம். டவ்னிங் தெருவில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது;
பிரிட்டனில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் கரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அதாவது 1 கோடியே 80 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இதன்மூம் ஏராளமானவர்களின் உயிரைக் கேள்விக்கு இடமின்றி நாம் காத்திருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
உங்களது கடின முயற்சியால்தான் இன்றைக்கு இந்த தளர்வுகளை என்னால் அறிவிக்க முடிகிறது. பிரிட்டனில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு கரோனா இறப்பு வீதமும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் வீதமும் தற்போதுதான் குறைந்திருக்கிறது. இதேபோல், கரோனா தொற்று பரவல் வீதமும் கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் இப்போது குறைந்திருப்பதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

Add your comment

Your email address will not be published.

6 − three =