பொது இடங்களில் மே 17 முதல் கட்டித் தழுவ அனுமதி?

 

பிரிட்டனில் 3ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வு மே 17ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிரிட்டனில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பொது இடங்களில் ஓராண்டுக்குப் பிறகு ஒருவரையொருவர் கட்டித் தழுவ மே 17 முதல் அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமுடக்க தளர்வுக்கான வழிமுறைகளை வகுப்பதில் அமைச்சர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
3ஆம் கட்ட தளர்வுகளை அறிவிக்கும் முன்பாக அமைச்சர்கள் அடுத்த வாரம் கூடி முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். பிரிட்டனில் பொதுமுடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால், சமூக இடைவெளியை மேற்கொண்டு கடைப்பிடிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

Add your comment

Your email address will not be published.

fifteen − 9 =