பிரிட்டனில் இன்று எத்தனை பேருக்கு கரோனா?

 

பிரிட்டனில் வியாழக்கிழமை மேலும் 2729 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்தது. 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் பலியாகி இருக்கின்றனர்.
பிரிட்டனில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தினசரி கரோனா சராசரி பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும், கடந்த சில வாரங்களாக சரிவு வீதம் குறைவாகவே காணப்படுகிறது.
கரோனாவுக்கு எதிரான போரில், பிரிட்டன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்தாலும், இந்த ஆண்டின் ஏதாவது ஒரு தருணத்தில் அடுத்த அலை எழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரித்து இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

nineteen + four =