இங்கிலாந்தில் 10 ஆயிரம் வீடுகளை கட்ட ஜான் லூயிஸ் நிறுவனம் திட்டம்

இங்கிலாந்தில் லண்டன் போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், நாடு முழுவதும் 10 ஆயிரம் வாடகை வீடுகளை கட்ட பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோரான ஜான் லூயிஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதில், 7 ஆயிரம் வீடுகளை சொந்த கட்டிடத்தில் கட்டவும், 3 ஆயிரம் வீடுகளை புதிய இடத்தில் கட்டவும் அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அதேவேளையில், இத்திட்டத்துக்காக நடைமுறையில் உள்ள கடைகள் எதுவும் இடிக்கப்பட மாட்டாது என்றும், இதனால் ஊழியர்கள் வேலையிழப்பை சந்திக்க மாட்டார்கள் என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்தது.

Add your comment

Your email address will not be published.

18 + eleven =