விடுமுறை இல்லங்களாக மாறும் குடியிருப்புகள்

கண் எதிரே வீடுகளை இழக்கும் பூர்வகுடிகள்

வேல்ஸ் மாகாணத்தின் கடற்கரை கிராமம் பெம்ப்ரோக்ஷிர். மிகவும் அழகிய கடற்கரையையும், மரங்களையும் கொண்ட இந்த கிராமத்தில், ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறையைக் கழிக்க படையெடுத்து வருகின்றனர். இதனால், இங்கு வசிக்கும் பூர்வகுடிமக்கள், தாங்கள் வசிக்கும் வீடுகளை சுற்றுலாத் துறைக்கு விற்றுவிட்டு வேறு இடம் நோக்கி நகர்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பூர்வகுடிகள் வாழ்ந்த வீடுகள், விடுமுறை இல்லங்களாக மாற்றப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன.

அந்த வகையில், 50இல் 48 வீடுகள் உருமாற்றம் அடைந்துவிட்டன. இரண்டு வீடுகளில் மட்டுமே பூர்வகுடிகள் வசிக்கின்றனர். தங்கள் கண் எதிரே தங்களது கிராமம் பாழாய்ப் போவதை கண்டு மனமுடைந்த பூர்வகுடிகள், தங்கள் சமுதாயம் இதோடு அழிந்துவிடுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

fifteen − six =