உயிர்வாழவே சிரமப்படும் ஹாங்காங் மக்கள்

 

சீனாவிடம் இருந்து விடுதலை கோரி, ஹாங்காங் மக்கள் தன்னிச்சையாக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹாங்காங்கின் நீதி தன்னாட்சியை நசுக்கும் பொருட்டு சீனா இயற்றிய தேசிய பாதுகாப்புச் சட்டம் இன்றுமுதல் (புதன்கிழமை) அமலுக்கு வந்தது. இதன்மூலம் ஹாங்காங்கில் விடுதலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டாலோ, பிரிவினை கருத்துகளை பரப்பினாலோ ஆயுள் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

மேலும், இந்த சட்டம் அமலுக்கு வந்த ஒருசில மணி நேரத்திலேயே சீன அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக பத்திரிகையாளர்கள், போராட்டக்காரர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சீன அரசின் இந்த அடக்குமுறையால், ஹாங்காங்கில் உயிர் வாழ்வதே சவாலாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Add your comment

Your email address will not be published.

thirteen + four =