ஹாங்காங்கில் வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது

ஹாங்காங்கில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் 6 சிறுவர்கள் உள்பட 9 பேர் வெடிகுண்டு தயாரித்தனர். இதையறிந்த அப்பகுதி காவல் துறையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், நீதிமன்றம், பொது போக்குவரத்து மற்றும் ஆள்நடமாட்டம் மிகுந்த தெருமுனைகளில் வெடிகுண்டுகளை வைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. 9 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சீனாவிடம் இருந்து விடுதலை கோரி, ஹாங்காங்கில் தன்னெழுச்சியாக பொதுமக்கள் போராடி வரும் நிலையில், அதை முறியடிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதலுக்கு திட்டம் வகுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

14 − six =