நகர சொன்ன பெண் மீது சரமாரி தாக்குதல்

இங்கிலாந்தின் வித்தாம் எசக்ஸ் சர்ச் தெருவில் வசிக்கும் 40 வயது பெண்ணின் வீட்டுக்கு அருகே கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில், 6 டீன் ஏஜ் சிறுவர்கள் கூடி கும்மாளமிட்டனர். இதனால் அவதியடைந்த அந்த பெண், அவர்களை அங்கிருந்து நகரச் சொன்னார். இதன்காரணமாக ஆத்திரமடைந்த அந்த கும்பல், அந்த பெண்ணின் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த அவர், தனது குடும்பத்தினரின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும்படியாக காயம் ஏதும் ஏற்படவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணையில், அந்த சிறுவர்கள் அனைவரும் 15 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும், அனைவரும் வெள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் தீவீரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

1 − 1 =