உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு கரோனா பாதிப்பு

உச்சநீதிமன்றத்தில் கரோனா வழக்கை விசாரித்துவந்த அமர்வுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட், கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா மீதான இந்த வழக்கு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை (மே 13) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், டி.ஒய். சந்திரசூட் கரோனா பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதற்கான நிபுணத்துவத்தை வகுக்கும் வகையில், தேசிய அளவில் குழு ஒன்றை அவர் நியமித்திருந்தார். மேலும், தேசம் பேரிடரை எதிர்கொள்ளும்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருக்க முடியாது என்று மத்திய அரசை அவர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

eight + 20 =