லண்டனில் அதிவேக ரயில் சேவை ரத்து

 

 

அதிவேக ரயில்களில் விரிசல் கண்டறியப்பட்டதால், லண்டன் உள்பட பிரிட்டனின் பெரும்பாலான நகரங்களில் ரயில்சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிரேட் மேற்கத்திய ரயில்வே, லண்டன் வடகிழக்கு ரயில்வே, ஹல் ரயில்களில் இந்த விரிசல் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பயணிகள் பயண திட்டங்களை ஒத்திவைக்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் லண்டன், பிரிஸ்டல், கார்டிப், பென்சான்ஸ் நகரங்களுக்கு இடையே ஆன அதிவேக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் எடின்பர்க், நியூகாஸ்டில், யார்க் மற்றும் லண்டன் நகரங்களுக்கு இடையே கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் அதிவேக ரயில்கள் இயங்காது.

Add your comment

Your email address will not be published.

three × one =