‘ஹை ஹீல்ஸ்’ அணிந்து ராணுவ அணிவகுப்பு

உக்ரைன் எதிர்க் கட்சி கண்டனம்

உக்ரைனில் ஆகஸ்ட் 24ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இங்கு பெண் ராணுவ வீரர்கள் ‘பூட்ஸ்’ அணிந்தவாறு அணிவகுப்பில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் முதன் முறையாக பூட்ஸ் அணிவதற்கு பதிலாக ‘ஹை ஹீல்ஸ்’ அணிந்து பெண்கள் ராணுவ அணிவகுப்பில் ஈடுபட உக்ரைன் அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஐரினா, இது கவர்ச்சி தானே தவிர, பாலின சமத்துவம் அல்ல என்றும், இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

15 − four =