அமெரிக்கா நலன் கருதி இந்தியாவுக்கு உதவுங்கள்

 

அதிபர் ஜோ பிடனுக்கு எம்.பி.க்கள் கடிதம்

 

அமெரிக்காவின் நலன் கருதி, இந்தியாவுக்கு இந்த இக்கட்டான தருணத்தில் கூடுதல் உதவிகளை அளிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு அந்நாட்டு எம்பிக்கள் 50க்கும் மேற்பட்டோர் கடிதம் அனுப்பினர்.

கலிபோர்னியா எம்பி பிராட் ஷெர்மன் தலைமையில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், இந்தியாவில் கரோனா இருக்கும் வரை, தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்கர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், உருமாறிய அந்த கரோனா எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை வேரறுப்பதற்கான உதவியை நாம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், புதுடெல்லியில் உள்ள அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங்குடன் தாங்கள் உரையாடியதன் வாயிலாக இந்தியாவில் பல்வேறு மருத்துவ உபகரணங்களுக்கு தேவை அதிகமாக இருப்பதையும் தாங்கள் அறிந்து கொண்டதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எம்பிக்கள், அதன்படி ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பு கருவிகள், வென்டிலேட்டர் மற்றும் ரெம்டிசிவிர், டோசிலிசுமாப் ஆகிய மருந்துகளை உடனடியாக கூடுதல் எண்ணிக்கையில் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதுதவிர அமெரிக்காவில் உபரியாக இருக்கும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியையும் இந்தியாவுக்கு அனுப்பிவைத்து அதன் துயர்துடைக்க வேண்டுமென எம்பிக்கள் ஒருமித்து குரல் எழுப்பி இருக்கின்றனர். இதுவரை இந்தியாவுக்கு அமெரிக்கா சுமார் 100 மில்லியன் டாலர் (ரூ.7 கோடியே 32 லட்சத்து 79 ஆயிரத்து 10 ஆயிரம்) மதிப்பில் கரோனா தடுப்பு உபகரணங்களை அனுப்பிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

seventeen − 4 =