முள்ளம்பன்றிகளுக்காக உருகும் ஓர் ஜீவன்…

இங்கிலாந்தில் முள்ளம்பன்றிகளின் இனம் அழிந்து வருகிறது. பிரிஸ்டலில் முள்ளம்பன்றிகள் அடிக்கடி சாலையில் நடமாடுவதால், சமயங்களில் அவை வாகனங்களின் சக்கரத்தில் சிக்கி, விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேரிடுகிறது. எனவே, முள்ளம்பன்றிகளை காக்க நினைத்த கிளவ்டியா பென்னி என்ற சமூக ஆர்வலர், பிரிஸ்டலின் எகர்டன் சாலையோரத்தில், “”இது முள்ளம்பன்றிகள் நடமாடும் பகுதி. மெதுவாக செல்லவும்” என தனது சொந்த செலவில் அறிவிப்பு பதாகை வைத்தது வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதேபோல், பிரிஸ்டல் முழுவதும் அறிவிப்பு பலகை வைக்க நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார் அவர்.

Add your comment

Your email address will not be published.

18 − four =