கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலால் தீப்பற்றி எரியும் கிராமம்

கனடாவில் வரலாறு காணாத வெயில் சுட்டெரிக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள லைட்டான் கிராமத்தில் அதிகபட்சமாக 49.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கடந்த வாரம் பதிவானது. இந்நிலையில், அந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ, காற்றின் காரணமாக கிராமம் முழுவதும் பரவி, பொருள்கள் அனைத்தையும் நாசம் செய்தது. இதில், எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்ற விவரம் தெரியவரவில்லை. மேலும், இந்தத் தீ விபத்தில் அந்த கிராமத்தின் 90 சதவீத நிலப்பரப்பு அழிந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Add your comment

Your email address will not be published.

4 × one =