லண்டன் ஹீத்ரோ விமான நிலைய ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வரும் இன்றுமுதல் 10 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். ஹீத்ரோ விமான நிலையத்தில் ஐந்தாவது டெர்மினல் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,400 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
விடுமுறை நாளிலும் கூட ஊழியர்கள் போராட்டத்தை தொடர இருப்பதால் அன்றைய தினம் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் கடுமையான அசவுகரித்தை சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 1400 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் மாற்று ஏற்பாடுகள் செய்ய தயாராக இருப்பதாக ஹீத்ரோ விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
GIPHY App Key not set. Please check settings