கரோனா வேகம் குறைந்தாலும் கவனம் தேவை

தடுப்பூசிகள் துறை அமைச்சர் கருத்து

பிரிட்டனில் கரோனா பரவல் வேகம் குறைந்தாலும், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென தடுப்பூசிகள் துறை அமைச்சர் நாதீம் ஷஹாவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டனில் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 50 பேர் என்ற வீதத்தில் கரோனா பாதிப்பு வீதம் வெகுவாக குறைந்துவிட்டது. அதிலும், 95 சதவீத பகுதிகளில் கரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பரில் கரோனா உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது முதன்முறையாக இயல்புநிலை திரும்புகிறது.
இதுகுறித்து தடுப்பூசிகள் துறை அமைச்சர் நாதீம் ஷஹாவி கூறுகையில், இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எளிதில் சந்தித்து பேசலாம் என்கிற நிலைமை வரும்போது, இதைக் காட்டிலும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். ஜூன் 21ஆம் தேதி கரோனா கட்டுப்பாடுகளிலிருந்து முழுமையான விலக்கு அறிவிக்கப்படலாம். ஆனாலும், கோடைத் திருவிழா டிக்கெட் பெற்றவர்களால், அவர்களுக்கும், பிறருக்கும் மிகப்பெரிய இடர் நேரிடப் போகிறது என்றார் அமைச்சர்.

Add your comment

Your email address will not be published.

eighteen + 9 =