தைத்திருநாளன்று பொங்கல் பானை வைக்க உகந்த நேரம் இதுதான்! விவரம் உள்ளே!

தை மாதத்தின் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மண்ணையும், அது தரும் வளத்தினை மட்டுமல்ல, இயற்கையை வாழ்த்தி வணங்கும் பண்டிகை பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு படையல் வைத்து வழிபாடு செய்து அனைவருக்கும் பொங்கலை கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறுவார்கள்.’

திறந்த வெளியில் பொங்கல் (Pongal) வைப்பதால், சூரிய பகவான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வதாக நம்பிக்கை. இனிப்புப் பொங்கல் மட்டுமல்ல, இனிப்பின் அடிப்படையான, அடிக் கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கலைப் பொங்குகிறார்கள்.

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு இந்தியா. நம் நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும் (Sun), இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படும் நாளன்று அனைவரின் இல்லங்களிலும் இனிப்பும், மகிழ்ச்சியும் பொங்கிப் பரவும்.

மங்கலம் பொங்க மனையில் பால் பொங்கும் பொழுது “பொங்கலோ பொங்கல். மகர சங்கராந்திப்பொங்கல்” என்றும் மூன்று முறை சொல்லிப் பலவிதமான காய்கறிகளை (Vegetable) சேர்த்துக் கூட்டுக்குழம்பு வைத்து, அதனை சூரிய பகவானுக்கு படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு. கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும்.

2021ஆம் ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல்9.00 மணிக்குள் அல்லது காலை 10.30 மணி முதல் 12.00 மணி.