உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளை வசப்படுத்திய படம் ஹாரி பாட்டர். இதில் பத்மா பாட்டீல் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் நடிகை அஃப்சான் ஆசாத். முஸ்லிமான இவர் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் வசித்து வருகிறார்.
கடந்த வாரம் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பண்டிகை வந்தது. இதனை அஃப்சான் ஆசாத் கோலாகலமாக கொண்டாடினார். பின்னர், மான்செஸ்டர் சில்ரன் மருத்துவமனைக்கு அவர் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், பொம்மைகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கி குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தினார்.
ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை நடிகை அஃப்சான் ஆசாத் ஆசாத் ஒரு சேவையாக செய்து வருகிறார். மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், செவிலியர்களுடன் அவர் புகைப்படம் எடுத்து அனைவரையும் குஷிப்படுத்தினார்.
GIPHY App Key not set. Please check settings