பதவியை துறந்தாலும் பரபரப்புக்கு பஞ்மில்லை!

பிரிட்டனில் அலுவலகத்தில் வைத்தே பெண் உதவியாளருக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில், மேத்யூ ஹான்காக் தான் வகித்துவந்த சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை இழந்தார். ஆனாலும், அவரை பற்றிய சர்ச்சைக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. அரசாங்க அலுவல் பணிக்கு மேத்யூ ஹான்காக் தனது தனிப்பட்ட மெயிலை பயன்படுத்தியது, தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணுக்கு பாராளுமன்றத்துக்குள் நுழைய பாஸ் ஏற்பாடு செய்து கொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தி வருகிறது. இது அவருக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

19 − 9 =