வேல்ஸ் மாகாணத்தில் உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு

 

 

பிரிட்டனின் வேல்ஸ் மாகாணத்தில் கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால், உடற்பயிற்சிக் கூடங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதேபோல், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் உள்அரங்கில் (இன்-டோர்) சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதுதவிர நீச்சல் குளங்கள், வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு குறைந்ததால், பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

4 − 1 =