கொலம்பியா அதிபரின் ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு

கொலம்பியா அதிபர் இவான் டியூக், நார்ட் டி சான்டன்டர் மாகாணத்தின் க்யூகட்டா நோக்கி ஹெலிகாப்டரில் நேற்று சென்று கொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரும் பயணித்தனர். அந்த ஹெலிகாப்டர் வெனிசூலா எல்லை அருகே பறந்தபோது, அதை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், என்ஜின் பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்தது. இதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டரை பத்திரமாக விமானி தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை. இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதலால் தங்களை அச்சுறுத்த முடியாது என அதிபர் இவான் டியூக் கண்டனம் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

14 − three =