பெண் மீது துப்பாக்கிச்சூடு

மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்

 

லண்டன் பேக்ஹாம் கன்சோர்ட் ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், 20 வயது மதிக்கத்தக்க பெண் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அந்த பெண் அவ்விடத்திலேயே சரிந்து விழுந்தார். தகவலறிந்த காவல் துறையினர் ஆம்புலன்சில் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, அவரது இந்த நிலைமைக்கு காரணமான நபரை அடையாளம் காணும் வகையில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து காவல் துறைக்கு உதவ வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அப்பகுதியில் வீடு வீடாக சென்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேக்ஹாம் கன்சோர்ட் ரோடு மூடப்பட்டது.

Add your comment

Your email address will not be published.

5 × four =