கருப்பின போராளி மீது துப்பாக்கிச்சூடு

 

மருத்துவமனையில் கவலைக்கிடம்

 

லண்டனில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட கருப்பின போராளி சாஷா ஜான்சன், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

தெற்கு லண்டன் பேக்ஹாம் பகுதியில், கன்சோர்ட் ரோட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவரது தலையில் துப்பாக்கி குண்டு துளைத்தது. இதனால் நிலைகுலைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லண்டனில் கருப்பின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர் 27 வயது சாஷா ஜான்சன். இதற்கு முன்பாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் வரவில்லை என்றும், அவரை சுட்டவர்களை தீவிரமாக தேடிவருவதாகவும் துப்பறியும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

கருப்பின போராளி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Add your comment

Your email address will not be published.

seventeen + five =