பச்சைப் பட்டியல் நாடுகளுக்கு செல்ல பச்சைக்கொடி!

பச்சைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு எந்தவித கட்டுப்பாடுமின்றி பொதுமக்கள் சென்றுவரலாம் என்று ஸ்காட்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாடு திரும்பியதும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. மே 24ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
பிரிட்டனில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள் சிவப்பு (அதிக பாதிப்பு), மஞ்சள் (மிதமான பாதிப்பு), பச்சை (குறைவான பாதிப்பு) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான வரைமுறை 4 வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படுகிறது.
அந்தவகையில் தற்போது பச்சைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல், இஸ்ரேல், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, புருணே, ஐஸ்லாந்து, கிப்ரல்தார், பாக்லாந்து தீவுகள், பரோ தீவுகள், தென் ஜார்ஜியா, சான்ட்விச் தீவுகள், செயின்ட் ஹெலிநா, டிரிஸ்டான் டி கன்ஹா, அசென்சன் தீவு ஆகிய நாடுகளுக்கு எந்த வித கட்டுப்பாடுமின்றி ஸ்காட்லாந்து மக்கள் பயணிக்கலாம்.
முன்னதாக அவர்களது இருப்பிடத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பிப்பதும், பயணத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்துகொள்வதும் கட்டாயம். ஆனால், நாடு திரும்பும்போது குவாரண்டைன் எனப்படும் தனிமைப்படுத்துதலுக்கு உட்பட வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், சிவப்புப் பட்டியல் நாடுகளிலிருந்து வருபவர்கள் கட்டாயம் ஹோட்டலில் 10 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்காட்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

1 × two =