கிரீன் லிஸ்டில் போர்ச்சுகல், இஸ்ரேல், கிபரல்தார்..!

 

 

கரோனா தொற்று குறைந்துவரும் போர்ச்சுகல், இஸ்ரேல், கிபரல்தார் ஆகிய நாடுகளை அடுத்த மாதம் முதல் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதற்கான கிரீன் லிஸ்டில் இணைக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இங்கு பயணம் மேற்கொண்டு பிரிட்டன் திரும்புபவர்கள் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அதேவேளையில், துருக்கி, மாலத்தீவுகள், நேபாளம் போன்ற நாடுகளில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால், அவை ரெட் லிஸ்டிலேயே நீடிக்கும் என்று பிரிட்டன் அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

3 × 2 =