பச்சைப் பட்டியலில் மேலும் சில நாடுகளை இணைக்க வேண்டும் தொழில் அதிபர்கள் வேண்டுகோள்

ஸ்பெயின் தீவுகளான இபிஷா, மஜோர்கா, மினோர்கா மற்றும் மால்ட்டா ஆகிய நாடுகள் பிரிட்டனில் இருந்து பயணம் மேற்கொள்வதற்கான பச்சைப் பட்டியலில் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பச்சைப் பட்டியலில் மேலும் சில நாடுகளை சேர்த்து சுற்றுலாவுக்கு பிரிட்டனை திறந்துவிட வேண்டுமென தொழில் அதிபர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுமட்டுமன்றி, மஞ்சள் பட்டியல் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு 10 நாள்கள் தனிமைப்படுத்துவதில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த பிரதமர், இருடோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கோடைக் காலத்தில் பிரிட்டனை சுற்றி பார்க்க வருவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

Add your comment

Your email address will not be published.

5 × five =