CSIR நீரி ஆய்வகத்தில் பசுமை பட்டாசு உற்பத்தி சான்று பெறலாம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் கல்லுாரியில் செயல்படும் சி.எஸ்.ஐ.ஆர். நீரி ஆய்வகத்தில் பசுமை பட்டாசு உற்பத்தி சான்று பெறலாம் என நீரி விஞ்ஞானி தெரிவித்தார்.
சிவகாசி சுற்று பகுதியில் சுற்று பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதால் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடைகோரி 2018ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் , பேரியம் நைட்ரேட் பயன்படுத்த கூடாது, சரவெடி தயாரிக்க கூடாது என உத்தரவிட்டது.
மேலும் குறைந்த மாசு உள்ள பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என தெரிவித்தது. எனவே பட்டாசு உற்பத்தியாளர்கள் நாக்பூரில் உள்ள மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை அமைச்சகம் (சி.எஸ்.ஐ.ஆர்.,) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம் (நீரி) ஆய்வகத்திற்கு சென்று பசுமை பட்டாசுககு பதிவுச் சான்று பெற்றனர்.
மேலும் நீரியில் புதிதாக பதிவு செய்யவோ அல்லது பதிவை புதுப்பிக்கவோ நாக்பூர் சென்றனர். சிவகாசியில் உள்ள தனியார் கல்லுாரியில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ.ஆர்., – நீரி ஆய்வகத்தில் பசுமை பட்டாசு உற்பத்தி சான்று பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
.இதுகுறித்து சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் – நீரி ஆய்வக விஞ்ஞானி சரவணன், தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா ) தலைவர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள பட்டாசு உற்பத்தியாளர்களுக்கான சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சி.எஸ்.ஐ.ஆர்., – நீரி சார்பில் சிவகாசி ஏ.ஏ.ஏ., பொறியியல் கல்லுாரியில் தற்காலிகமாக செயல்படும் ஆய்வகத்தில் பட்டாசு குறித்த தகவல்களை பெறுவதோடு, பட்டாசு மாதிரிகளை ஆய்வுக்கு சமர்ப்பிக்கலாம்.
புதிய ரக பட்டாசுகளை ஆய்வுக்கு கொண்டு வரும் போது ரசாயன கலவை குறித்த விவரங்களையும் கொண்டு வரவேண்டும். சி.எஸ்.ஐ.ஆர்., -நீரி வழிகாட்டுதலின்படி உள்ள ரசாயனக்
குறித்த விவரங்களையும் கொண்டு வரவேண்டும். சி.எஸ்.ஐ.ஆர்., -நீரி வழிகாட்டுதலின்படி உள்ள ரசாயனக் கலவை அட்டவணையின் கீழ் பட்டாசு உற்பத்தி செய்திருந்தால் அதற்கான மாதிரியை சமர்ப்பிக்க தேவையில்லை. ஆனால் ரசாயன அளவில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதற்கான மாதிரிகளை, உடன் அதற்கான தொகையையும் செலுத்த வேண்டும்.
பட்டாசு உற்பத்தியாளர்கள் நீரியில் புதிதாக பதிவு செய்யவோ அல்லது பதிவை புதுப்பிக்கவோ நேரடியாக அணுகலாம். மேலும் விபரங்களுக்கு csirneerirace.sivakasi@gmail.com என்ற மின்னஞ்சல், 80726 87626ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.