in

பெண் காவலர் தற்கொலை வழக்கில் அரசு ஊழியரான கணவர் கைது…


Watch – YouTube Click

பெண் காவலர் தற்கொலை வழக்கில் அரசு ஊழியரான கணவர் கைது…

 

திருபுவனையை சேர்ந்த மின்துறை ஊழியரான வினோத். இவரது மனைவி சத்யா(26). இவர் ஊர்காவல் படை பிரிவில் பணியாற்றியவர். சில மாதங்களுக்கு முன் நடந்த காவலர் தேர்வில் தேர்ச்சியாகி, பயிற்சி முடித்து வில்லியனுார் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வந்தார்.

அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அவர் திடீர் என ஆயுதபடை பிரிவிற்கு மாற்றப்பட்டார். திருபுவனையில் இருந்து கடந்த சில வருடத்திற்கு முன்பு சத்யா, தனது தாயார் வீட்டின் அருகே பத்துக்கண்ணு கிரீன் சிட்டியில் மனை வாங்கி வீடு கட்டி குடியேறினர்.

இதற்கிடையில் கணவர் வினோத்திற்கும், சத்யாவிற்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலடைந்த சத்யா கடந்த 12ம் தேதி மாலை 5:30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தபோது துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை குறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். கணவர் வினோத் கொடுத்த டார்ச்சரால் தான், பெண் காவலர் சத்யா தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் உறுதியானது. அதனை தொடர்ந்து கணவர் வினோத் மீது, தற்கொலைக்கு துாண்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களே ஆனதால் சத்யா தற்கொலை சம்பவத்தை தாசில்தார் சுபத்ரா விசாரணை மேற்கொண்டு வருகிறார். தாசில்தார் விசாரணை அறிக்கை தாக்கலுக்கு பிறகு வழக்கு மேலும் மாற்றம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தடுமாறும் ரோஹித், கோலி

ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை… மாயாவுக்கு ரெட் கார்டு கொடுங்கள்… Shock கொடுத்த ஷகிலா