ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே தங்கத்தில் கழிவறை கட்டிய போலீசார்

ஷ்யாவின் தெற்கு ஸ்டாவ்ரொபோல் பிராந்திய போக்குவரத்து காவல் பிரிவு தலைவராக பணிபுரிபவர் கர்னல் அலெக்ஸி ச”ஃ”போநவ். இவர் சரக்கு வாகனங்களுக்கு ஒப்புதல் அளித்தால்தான், அவை சோதனைச் சாவடிகளை கடந்து செல்ல முடியும். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இவர், சட்டவிரோத பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளித்து அதற்காக லட்சக்கணக்கில் கரன்சியை கறந்தார்.

இதற்கு போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் சக போலீசாரும் உடந்தையாக இருந்து, லஞ்சம் கொடுத்த வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் எவ்வித கட்டுப்பாடுமின்றி கடந்து செல்ல உதவிகரமாக இருந்தனர். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்தக் கும்பலை பொறிவைத்து பிடித்தனர் ரஷ்ய ஊழல் ஒழிப்பு போலீசார்.

அதன்பின்னர் தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லஞ்ச பணத்தில் இந்த கும்பல் தங்களுக்கென்று சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதுமட்டுமன்றி ஒரு பங்களாவையே வளைத்து போட்டு அதில் கழிவறை, சமையலறை என அனைத்தையும் தங்கத்தால் அலங்கரித்து, சுகபோக வாழ்க்கையில் திளைத்தது அம்பலமானது.

இதனால் மலைத்து போன ஊழல் ஒலிப்பு போலீசார், அலெக்ஸி ச”ஃ”போநவ் உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கும்பலுக்கு மா”ஃ”பியா கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று கூறிய உள்ளூர் அரசியல்வாதி, அவர்களின் துணையில்லாமல் இவ்வாறு உல்லாச வாழ்க்கையில் திளைப்பது கடினம் என்றும் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

eight + 9 =