இங்கிலாந்து மன்னராக வரும் சனிக்கிழமை மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக முடி சூட்டி கொள்கிறார். இதையொட்டி அவர் தங்க ரதத்தில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்த தங்க ரதம் பிரம்மாண்டமான அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தங்க ரதத்தை பொதுமக்கள் அருகில் இருந்து காணும் வகையில் லண்டனில் வீதிகளில் இந்த தங்கரதம் எடுத்து வரப்படுகிறது. இதை பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர். முன்னதாக வெஸ்ட் மினிஸ்டர் அபே பகுதியில் இந்த தங்க ரதம் வந்தடைந்தது. அதை பொதுமக்கள் பார்வையிட்டதுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
GIPHY App Key not set. Please check settings