கரோனாவுக்கு பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இலவச கல்வி

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

கரோனாவுக்கு பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்துவாடும் பிள்ளைகளுக்கு நவோதயா வித்யாலயா பள்ளியில் இலவச கல்வி அளித்து அவர்களின் எதிர்காலம் சிறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை கடிதம் அனுப்பினார். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட நவோதயா வித்யாலயா பள்ளியின் சிறப்பம்சங்களை அதில் குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, நாடு முழுவதும் உள்ள 661 பள்ளிகள் வாயிலாக பிள்ளைகளின் கல்விக்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

seven + 15 =