பாகிஸ்தானில் லண்டன் பெண் வழக்குரைஞர் சுட்டுக் கொலை

 

வெஸ்ட் லண்டன் பெல்தாம் பகுதியைச் சேர்ந்தவர் மேய்ரா சல்பிகர் (26). பாகிஸ்தானில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற இவர், அங்குள்ள சட்ட நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இதற்காக லாகூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில், மேய்ரா சம்பவத்தன்று ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தார். அவரது கழுத்து பகுதியிலிருந்து ரத்தம் வடிந்தது.

இதை கண்டு அதிர்ச்சிக்குள்ளான அவரது உறவினர், இதுதொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், மேய்ராவை இரண்டு இளைஞர்கள் காதலிப்பதாகக் கூறி பின்தொடர்ந்ததாகவும், அவரது சாவுக்கு அவர்கள்தான் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Add your comment

Your email address will not be published.

fourteen + one =