இளைஞரை விரட்டியடித்த சிறுமி!

பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றவர்

கிரேட்டர் மான்செஸ்டர் விகான், லேக் பகுதியில் உள்ள வெஸ்ட்லேக் பார்க்கில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 5.30 மணிவரை 14 வயது சிறுமி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் தனிமையில் அங்கு வந்ததை அறிந்த 20 வயது அடையாளம் தெரியாத நபர், அந்த சிறுமியை புதருக்குள் தள்ளி பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட சிறுமி, வீரத்துடன் போராடி அவரிடமிருந்து தப்பினார். இந்த சம்பவம் குறித்து மான்செஸ்டர் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. மார்சென்ஸ்டர் சூப்பிரண்டு மார்க் கென்னி குறிப்பிடுகையில், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை உள்ளூர் நபர்கள் ஆய்வு செய்து, எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த அந்த நபர், 6 அடி உயரத்தில், கழுத்தின் வலது பக்கத்தில் பச்சைக் குத்தியிருந்ததாகவும், அவரது கண்கள் வெண்மை கலந்த பச்சை நிறத்தில் இருந்ததாகவும், கருப்பு நிற மாஸ்க், உடற்பயிற்சி செய்வதற்கேற்ற பேண்ட் அணிந்திருந்ததாகவும் அந்த சிறுமி அடையாளம் காட்டியிருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

11 + 8 =