ஜெர்மனியில் விமானம், கப்பல், ரயில்வே, பேருந்து என அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினரும் ஊதிய உயர்வு வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று அனைத்து போக்குவரத்தும் அடியோடு முடங்கியது.
இதன் காரணமாக ஜெர்மனி மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதில் சிரமத்தை அனுபவித்தனர். போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு ஜெர்மனி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால் தங்கள் கோரிக்கைக்கு ஜெர்மனி அரசு செவி சாய்த்தால் மட்டுமே போராட்டத்தை முடிப்போம் என தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
GIPHY App Key not set. Please check settings