22 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டு கொலையாளி அப்பீல் செய்ய முடிவு

22 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டு கொலையாளி அப்பீல் செய்ய முடிவு

அமெரிக்காவின் மின்னிசொட்டா மாகாணம் மின்னபொலீஸ் நகரில் கடந்த ஆண்டில் ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற கருப்பினத்தவரை வெள்ளையின போலீஸ்காரர் டெரிக் சாவின் கழுத்தில் அழுத்திக் கொன்றார். உலகையே உலுக்கிய இந்த சம்பத்துக்கு காரணமான டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை நீதிபதி முறையாக அணுகவில்லை என்று கூறி, தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாக டெரிக் சாவின் தெரிவித்துள்ளார்.