ஜார்ஜ் “ஃ”பிளாய்டு கொலை வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவின் மின்னபொலீஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் ஆப்பிரிக்க அமெரிக்கரான 48 வயது ஜார்ஜ் பிளாய்டு பட்டப்பகலில் நடுத்தெருவில், வெள்ளை இன வெறிபிடித்த டெரிக் சாவின் என்ற போலீஸ் அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு துள்ளத்துடிக்க கொல்லப்பட்டார். உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி டெரிக் சாவினுக்கு 22ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடைசியில், காவல் துறையின் கொடூரத்தன்மை தீவிரமாக கருதப்படுவதை இந்த தீர்ப்பு உணர்த்துவதாக ஜார்ஜ் பிளாய்டின் சகோதரி பிரிட்கெட் பிளாய்ட் கண்ணீர்மல்க தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

5 × five =